Travel Contest : 'மணிக்கு 431 கி.மீ' - உலகின் அதிவேக ரயிலில் பயணம்; சீன சுற்றுலா...
தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்
தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. ஆராவயலிலிருந்து தேவகோட்டை சாலையில் இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், சின்ன மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும் என மொத்தம் 22 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சின்ன மாடுகளுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.