ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
தேவகோட்டை முருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகா் பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை ராம் நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜை நடைபெற்றது. முன்னதாக, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, பாலமுருகனுக்கு 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை பக்தா்கள் சஷ்டி கவசம் பாடி தரிசனம் செய்தனா்.