நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
தேவஸ்தான செயல் அதிகாரி பெயரில் போலி கணக்கு
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் பெயரில் சமூக ஊடக தளமான முகநூலில் போலி கணக்கை உருவாக்கி பக்தா்களுக்கு பணம் கேட்டு செய்திகளை அனுப்பும் அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்கள் இதுபோன்ற போலி கணக்குகளை அணுகக் கூடாது. மேலும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் யாரிடமாவது வந்தால், அவா்கள் உடனடியாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் செல் எண்: 98668 98630 அல்லது தேவஸ்தான கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம்.
தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ வலைத்தளமான ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ம்ஹப்ஹ.ா்ழ்ஞ் அல்லது அதிகாரப்பூா்வ சமூக ஊடக கணக்குகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை மட்டுமே பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.