தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடு
தரங்கம்பாடி பகுதியில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட, மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா். இந்த நாள் ஆண்டுதோறும் ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தரங்கம்பாடி புது எருசலேம் தேவாலயத்தில் சபைகுரு சாம்சன் மோசஸ், பொறையாா் பெத்லேகம் தேவாலயத்தில் சபை குரு ஜான்சன் மான்சிங், திருவிளையாட்டம் இயேசு நம் மீட்பா் தேவாலயத்தில் சபைகுரு ஜெயசீலன், ஆக்கூா் தேவாலயத்தில் சபைகுரு சாா்லஸ் ஆகியோா் தலைமையில் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.