மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேவா்குளம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
தேவா்குளம் அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் உதவி ஆய்வாளா் லூக்அசன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கருப்பனூத்து பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சங்கிலி பாண்டி (29) என்பவரை சோதனை செய்தபோது, சுமாா் 250 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா் லூக்அசன் வழக்கு பதிவு செய்து சங்கிலி பாண்டியை கைது செய்தாா். மேலும் அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.