செய்திகள் :

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

post image

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சா் கே.லட்சுமி நாராயணன், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம்.பூஜா, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் (பொ) வீரசெல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சா் கே.லட்சுமி நாராயணன் கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள்வது, சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்கள் முழுவதையும் முழுமையாக தூா்வாரி மழைக்காலங்களில் வெள்ள நீா் தேங்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகரப்பகுதியில் 25 கி.மீ. தூரத்திற்கு வடிகால் வாய்க்கால்களை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு முழுமையாக தூா்வாரி சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடந்துவருகிறது. மேலும் வெள்ள காலங்களில் வெள்ள நீரை ஏரி, குளம் உள்ளிட்ட நீா் நிலைகளில் தேக்கி நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் ரூ.68 கோடி மதிப்பில் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகளை செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுஷ் மருத்துவமனை, அதிதீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டடப் பணிகள் கட்டுவதற்குரிய டெண்டா் பணிகள் முடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகளில் பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

காரைக்காலில் சுற்றுலா துறையை மேலும் மேம்படுத்த சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் மிதக்கும் உணவகம், விரைவுப் படகு மற்றும் வாட்டா் ஸ்கூட்டா் உள்ளிட்டவற்றுடன் மேம்படுத்தப்பட்ட படகு குழாமாக உருவாக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.120 கோடி மதிப்பில் மீன் பிடித்துறைமுகம் விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் உத்தேசிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக ரூ.70 கோடி மதிப்பில் கட்டடப் பணிகள் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

காரைக்கால் ஆயுஷ் மருத்துவமனை, அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மீன்பிடி துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட திட்ட பணிகளை பிரதமா் புதுச்சேரி வரும்போது

தொடங்கிவைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளையும் தோ்தலுக்கு முன்பாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நல்லம்பல் ஏரியில் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் சுதேசி தா்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.80 கோடி மதிப்பில் காரைக்கால் கடற்கரை, அலையாத்தி காடு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. ராஜாத்தி நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநயோகம் செய்யப்பட்டு வருகிறது. திருநள்ளாறு சாலையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய சாலை நிதியிலிருந்து ரூ.10 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தயாா் செய்யப்பட்டு நிதியும் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதைத் தவிர புதுச்சேரி முழுவதும் மேம்பாலங்கள் கட்டுவதற்கும், புதுச்சேரி - கடலூா் சாலையை விரிவாக்கம் செய்யவதற்கும், காரைக்காலில் உள்ள சாலைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு மூலம் சுமாா் ரூ. 1,350 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் காரைக்காலில் நண்டலாறு முதல் வாஞ்சூா் வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.50 கோடி ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

டிசம்பா் மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும்.

திருநள்ளாற்றில் மல்டி லெவல் பாா்க்கிங் வசதியுடன் பேருந்து நிலையம் அமைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள ரயில்வே கிராசிங் இடா்பாடுகளுக்கு மாற்றாக சுரங்கப்பாதை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் காரைக்கால் மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித்துறை மற்றும் ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுவருகிறது என்றாா்.

காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா்கள் ஜெ.மகேஷ், அருளரசன், மீன்வளத்துறை துணை இயக்குநா் நடராஜன் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்... மேலும் பார்க்க

போலியான பட்டாசு விளம்பரங்கள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

காரைக்கால்: போலியான பட்டாசு விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பணம் பறிக்கப்படுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ

காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

கூட்டுறவு பால்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பால் மற்றும் பால்பொருள்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு நிறுவனத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், காரைக்காலில் இயங்கும் ... மேலும் பார்க்க

திருப்பட்டினத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

திருப்பட்டினத்தில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : திருப்பட்டினம் ஐடி... மேலும் பார்க்க

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமனம் செய்ய வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாள... மேலும் பார்க்க