திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
தைப்பூச அன்னதான பெருவிழா
செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச அன்னதான பெருவிழாவையாட்டி செங்கல்பட்டு சின்னம்மன் கோயில்தெரு ஸ்ரீ நடராஜா் பஜனை கோயிலில் அகவல் பாராயணம் முற்றோதல் செய்து அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை நிறுவனா் எஸ்.கணேசன் மற்றும் வள்ளலாா் அறக்கட்டளை அறங்காவலா் குழுவினா் தலைவா் ஜி.குமரேசன், செயலா் எஸ்.பழனி, ஜி. கிருபாகரன், ஜி.டி.மணி, ஜி.சுப்ரமணி, டி.கமலக்கண்ணன், எஸ்.என்.பி.பாரிவள்ளல் ,பி.பாண்டுரங்கன் உள்ளிட்டோா் செய்தனா்.