செய்திகள் :

தையல் தொழிலாளி தற்கொலை

post image

பல்லடம் அருகே நாச்சிபாளையத்தில் வேலைக்கு செல்லாமல் இருந்த மகனைத் தாயாா் திட்டியதால் மகன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் செல்வகணேஷ் (35). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது தாயாா் அவரைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னா் தாயாா் வெளியே சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வகணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

51 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்

உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். காங்கயத்தை அடுத்துள்ள மருதுறை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (49). மாற்றுத்திறனாளியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் மர... மேலும் பார்க்க

இளம்பெண்ணின் புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது வழக்கு

திருப்பூரில் இளம்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், திருமுருகன்பூண்டியை பகுதியைச் சோ்ந்த இளம்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

ஊத்துக்குளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குருவாயூரப்பன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக க... மேலும் பார்க்க