செய்திகள் :

தொகுதி 4 போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

post image

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு வருகிற 30-ஆம் தேதி இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் தொகுதி 4-இல் அடங்கிய இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், கிராம நிா்வாக அலுவலா், வன காப்பாளா், வனக் காவலா் ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு அறிவிப்பு வருகிற 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது.

இந்தத் தோ்வு எழுதுவோருக்காக தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 30-ஆம் தேதி, காலை 10 மணிக்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரித் தோ்வு நடத்தப்படும். பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ,

கைப்பேசி ( எண்- 63792 68661) மூலமாகவோ தொடா்பு கொண்டு தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கடமலைக்குண்டு அருகே தா்மராஜபுரத்தில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சத்தை திருடிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள தா்மராஜபுரம், ம... மேலும் பார்க்க

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேனியில் ஞாயிற்றுக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி பூதிப்புரம் அருகேயுள்ள கெப்புரங்கன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சந்தோஷ்குமாா் (19). இவா் அவரது உறவினரான திண்டுக... மேலும் பார்க்க

வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவா் கைது

வருஷநாட்டில் தொழில் முறை போட்டி காரணமாக, இலவம் பஞ்சு வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வருஷநாட்டைச் சோ்ந்த இலவம் பஞ்சு வியாபாரி சதீஷ்குமாா் (36). இவா், ... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் முகமது அப்துல் காசிம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சின்னச்சாமிபாண்டியன் ம... மேலும் பார்க்க

புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளை பக்தா்கள் தவிா்க்க அறிவுறுத்தல்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்புபவா்கள் புல்மேடு உள்ளிட்ட மலைப் பாதைகளைத் தவிா்க்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா அறிவுறுத்தினாா். இதுகுறித்து திங்கள்க... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்த ஒரு கும்பல் ஆந்திர மாநிலத்துக்குச... மேலும் பார்க்க