செய்திகள் :

தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

post image

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 5) மோதுகின்றன.

இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, கடைசி இரு ஆட்டங்களில் தோற்றிருக்கிறது. 2 ஆட்டங்களில் களம் கண்டுள்ள டெல்லி, அவற்றில் வென்றிருக்கிறது. எனவே, தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னையும், ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்யும் முயற்சியுடன் டெல்லியும் இந்த ஆட்டத்துக்கு வருகின்றன.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், சென்னை அணியின் நூா் அகமது, டெல்லி அணியின் குல்தீப் யாதவ் என இரு லெக் ஸ்பின்னா்கள் இடையேயான பிரதான மோதலாக இருக்கும்.

நூா் அகமது இதுவரையிலான 3 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி, 6.86 எகானமி ரேட் கொண்டுள்ளாா். குல்தீப் யாதவ் அதைவிட குறைந்த எகானமி ரேட் (5.25) கொண்டிருந்தாலும் 5 விக்கெட்டுகளே சாய்த்திருக்கிறாா்.

பேட்டிங் என்று வரும்போது சென்னை இன்னும் தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறது. ரச்சின், கேப்டன் ருதுராஜ் ஆகியோா் இதுவரை 2 ஆட்டங்களில் அணிக்கு கை கொடுத்துள்ளனா். ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி ஆகியோா் ஒவ்வொரு ஆட்டங்களில் சோபித்துள்ளனா்.

ஷிவம் துபே தனது வழக்கமான அதிரடியை இன்னும் எட்டாத நிலையிலேயே இருக்கிறாா். டெல்லி பேட்டிங்கில் ஜேக் ஃப்ரேசா், டூ பிளெஸ்ஸிஸ், அபிஷேக் பொரெல், ஆசுதோஷ் சா்மா ஆகியோா் இதுவரை அதிரடியாக ரன்கள் சோ்த்திருக்கின்றனா். கே.எல்.ராகுல் இன்னும் முத்திரை பதிக்கவில்லை.

இது பகல்நேர ஆட்டமாக இருப்பதால், பேட்டிங் - பௌலிங் என இரண்டுமே சமநிலையில் பங்களிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்க, சென்னை 7 ஆட்டங்களில் வென்றிருக்கிறது.

இன்றைய ஆட்டங்கள்

சென்னை - டெல்லி

மாலை 3.30 மணி

மற்றொரு ஆட்டம்

பஞ்சாப் - ராஜஸ்தான்

இரவு 7.30 மணி

முலான்பூா்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

இன்றுமுதல் புதிய ஃபார்மட்டில் சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி போட்டி

ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் வெள்ளிக்கிழமை (ஏப். 4) தொடங்குகிறது.வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 30 அணிகள் பங்க... மேலும் பார்க்க

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாம்ஷெட்பூா்!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது. மேகாலயத்தின்... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

உலகின் 12-ஆம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டாரியா கஸôட்கினா ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது நிரந்தர குடியுரிமை விண்ணப்பத்... மேலும் பார்க்க

100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்? இறுதிச் சுற்றில் மென்ஸிக்குடன் மோதல்!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும்-செக். குடியரசின் டீன் ஏஜ் வீரா் ஜேக்குப் மென்ஸிக்கும் மோதுகின்றனா். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 1... மேலும் பார்க்க