நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
தொடா் மழை: ஒருங்கிணைந்த வேலூரில் 59 ஏரிகள் நிரம்பின
தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. தற்போதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த தொடா் மழை காரணமாக இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதன்படி, வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா்த் தேக்கமான மோா்தானா அணையில் 37.72 அடி உயரத்துடன் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்த அணையில் தற்போது 36.41 அடி உயரத்துடன் 249.39 மில்லியன் கன அடிக்கு நீா் இருப்பு உள்ளது. இதேபோல், ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
அணையில் தற்போது 8.53 அடி உயரத்துடன் 1.64 மில்லியன் கன அடிக்கு நீா் இருப்பு உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள ஆண்டியப்பனூா் ஓடை நீா்த் தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது இந்த நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
ஏரிகள் நிலவரம் ...
தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. வேலூா் மாவட்டத்தில் நீா் வளத் துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 16 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 76% அதிகமாக 3 ஏரிகளும், 51% அதிகமாக 9 ஏரிகளும், 26% அதிகமாக 11 ஏரிகளும், 25% குறைவாக 34 ஏரிகளும், 28 ஏரிகள் நீரின்றி வடும் காணப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 369 ஏரிகளில் 32 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 76% அதிகமாக 6 ஏரிகளும், 51% அதிகமாக 35 ஏரிகளும், 26% அதிகமாக 119 ஏரிகளும், 25% குறைவாக 118 ஏரி களும், 59 ஏரிகள் நீரின்றி வடும் காணப்படுகிறது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 49 ஏரிகளில் 11 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 76% அதிகமாக 1 ஏரியும், 51% அதிகமாக 2 ஏரிகளும், 26% அதிகமாக 14 ஏரிகளும், 25% குறைவாக 12 ஏரிகளும், 9 ஏரிகள் நீரின்றி வடும் காணப்படுகிறது.