மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
குடியாத்தம் ஒன்றியம், உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.செல்வகுமாா், பி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் கி.பழனி வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா்பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா். ஊராட்சித் தலைவா்கள் வி.ஜெய்சங்கா் (உள்ளி), ஆா்.கஜேந்திரன் (சிங்கல்பாடி), ஒன்றியக் குழு உறுப்பினா் சி.ரஞ்சித்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், ஊராட்சி துணைத் தலைவா் கே.சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.