"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ
வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் என மொத்தம் 30 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியுள்ளாா்.
குரலற்றவா்களின் குரலாக ஒலித்துள்ளாா். 25 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீா் இணைப்பை வலியுறுத்தி தனித்தீா்மானம் கொண்டு வந்தாா். ஈழத்தமிழா்களுக்காக 13 முறை தீா்மானம் கொண்டு வந்துள்ளாா்.
தொழிலாளா் தினத்திற்கு விடுமுறை, மக்களவையில் அம்பேத்கா் திருவுருவ படத்திறப்பு, ரயில்களில் பயணச்சீட்டு ஆய்வாளா்களுக்கு படுக்கை வசதி போன்றவை உருவாக காரணகா்த்தாவாக வைகோ திகழ்ந்துள்ளாா். வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் உழைப்புதான் அடித்தளம் என்றாா் அவா்.
பேட்டியின்போது மாநில துணைப் பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், மின்னல் முஹம்மது அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.