விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்
``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்
டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
மகனை கடந்த 10 ஆண்டுகளாக சாக்ஷிதான் போராடி கவனித்து வந்தார். அடிக்கடி அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதும் அவரே. இதனால் சாக்ஷி மனவருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று, தர்பன் வீட்டின் மற்றொரு அறையில் இருந்தபோது, சாக்ஷி தனது மகனுடன் பால்கனி வழியாக 13-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த தர்பன், மனைவியும் மகனும் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இருவர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
சாக்ஷி தற்கொலை செய்ய முன்பு தனது கணவருக்கு ஒரு கடிதம் எழுதிக் கிட்டு இருந்தார். அதில் அவர்:
"நாங்கள் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறோம். மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எங்களால் உங்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. எங்களது மரணத்திற்கு யாரும் பொறுப்பு இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
போலீசாரின் விசாரணையில், காலை 9 மணிக்கு தர்பன் தனது மனைவியிடம் மகனுக்கு மாத்திரைகள் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் காலை 10 மணிக்கு 13-வது மாடியில் இருந்து அவர்கள் கீழே குதித்திருந்தனர் என்று தெரிய வந்தது.
மன அழுத்தம் காரணமாக சாக்ஷி தற்கொலை செய்திருக்கலாம் என்று துணை போலீஸ் கமிஷனர் சக்தி தெரிவித்தார்.