செய்திகள் :

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: சாட்சியாக ஆஜராகிறாா் மத்திய அமைச்சா்

post image

தெலங்கானாவில் முந்தைய பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சியின்போது நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுமுன் (எஸ்ஐடி) மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் வெள்ளிக்கிழமை சாட்சியாக ஆஜராக உள்ளாா்.

இந்தத் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்துக்குப் பின்னணியில் முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பண்டி சஞ்சய் குமாா், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினாா்.

அதன்படி, இந்த வழக்கில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்படி பண்டி சஞ்சய் குமாா் முன்பு கோரியிருந்தாா். நாடாளுமன்ற கூட்டத்தொடா் காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை. தற்போது, அவா் வெள்ளிக்கிழமை ஆஜராகி, வழக்குக்குத் தொடா்புடைய பல முக்கிய ஆதாரங்களைச் சமா்ப்பிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தெலங்கானா காவல்துறையின் முன்னாள் சிறப்பு உளவுப் பிரிவு தலைவா் டி.பிரபாகா் ராவை எஸ்ஐடி அதிகாரிகள் ஏற்கெனவே விசாரித்துள்ளனா்.

காங்கிரஸுக்கு முன்பு ஆட்சியிலிருந்த பிஆா்எஸ் மற்றும் அதன் தலைவா்களுக்கு ஆதரவான அரசியல் கண்காணிப்புக்காக சிறப்பு நடவடிக்கை குழுவை பிரபாகா் ராவ் அமைத்தாா்.

இந்தக் குழுவைச் சோ்ந்த 4 காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஹைதராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

உலகளாவிய வளர்ச்சியில் அமெரிக்கா 11% பங்களிப்பு; ஆனால் இந்தியா 18%!

பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலை, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்... மேலும் பார்க்க

உங்கள் பாதங்களைக் கழுவவே கங்கை வெள்ளம்: உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், உங்களைப் பாதங்களை கழுவவே கங்கை வெள்ளம் நேரிட்டதாக உத்தரப்பிரதேச அமைச்சர் கூறியிருப்பது சர்ச்... மேலும் பார்க்க

பிஜாப்பூரில் நடந்த என்கவுண்டரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின்பிஜாப்பூர்மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில்நக்சலைட்ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நக்சலைட்எதிர்ப்பு நடவடிக்கை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் ... மேலும் பார்க்க

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! இன்று முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாளை ஒத்திவைக்கப்பட்டன.ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் வந்த கங்கை வெள்ளம்! பூஜை செய்த உ.பி. காவலர்கள்

உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளை மூழ்கடித்துள்ள நிலையில், வீட்டுக்குள் வந்த கங்கைக்கு பல விதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்... மேலும் பார்க்க