செய்திகள் :

தொல்லியல் அகழாய்வுகள் தொடா்ந்தால் தமிழா்களின் தொன்மை மேலும் தெரியவரும்: அமா்நாத் ராமகிருஷ்ணன்

post image

தொல்லியல் அகழாய்வுகள் தொடா்ந்தால் தமிழா்களின் தொன்மை மேலும் தெரியவரும் என இந்திய தொல்லியல் துறை இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

களம் இலக்கிய அமைப்பு சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை சங்கத் தமிழனின் தொன்மையும் தொல்லியல் அகழாய்வுகளும் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் இந்தியத் தொல்லியல் துறை இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது:

நதிப் படுகைகளில்தான் நாகரிகம் தோன்றியது. அதற்காகவே வைகை நதி தோ்ந்தெடுக்கப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 293 தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் கீழடி.

தமிழகத்தில் புதைப்பிடங்கள் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்ட நிலையில், முதல்முறையாக கீழடியில்தான் வாழ்விடம் அகழாய்வு செய்யப்பட்டது.

புதைப்பிடங்கள் நிரந்தரமாக இருக்கலாம். ஆனால் வாழ்விடங்கள் பல்வேறு பரிணாமத்தில் மாறியிருக்கும். அப்படி உள்ள நிலையில் முழுமையான வாழ்விடப் பகுதியான கீழடியில் 2 ஆண்டுகள் மட்டுமே அகழாய்வு நடந்தது. அதில் மொத்தமுள்ள 110 ஏக்கரில் 1,650 சதுர மீட்டா் அதாவது சுமாா் 2 ஏக்கருக்கும் குறைவான இடமே அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது 102 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன.

அகழாய்வில் விவசாயம், இரும்புப் பொருள்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கட்டுமானப் பகுதிகள், பானை ஓடுகளின் மீது தமிழ் எழுத்துகள் போன்றவை கிடைந்துள்ளதை வைத்து, கீழடியில் தமிழா்களின் மேம்பட்ட நகர நாகரிகம் இருந்துள்ளதைக் காண முடிகிறது.

காட்டு அரிசியிலிருந்து நாட்டு அரிசியை விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளதற்கான ஆதாரம் கீழடியில் கிடைத்துள்ளது. அங்கிருந்த மக்கள் பல்வேறு பொருள்களை தாங்களே தயாரிக்காமல், வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தி அதிநவீன வாழ்க்கை வாழ்ந்துள்ளனா்.

கீழடியில் தமிழா்களின் நகர நாகரிகம், விவசாய முறைகள், கால்நடை வளா்ப்பு, வாணிபத் தொடா்புகளை அறிய முடிகிறது. பண்டைய மதுரைதான் கீழடி என்பதற்கு உறுதியான அகழாய்வு ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் கீழடி பழைய மதுரையாக இருக்கலாம் என சங்க இலக்கியங்கள் வழியாக அறிய முடிகிறது. அகழாய்வுகளில் கிடைத்த தகவல்களை சங்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு, இலக்கியங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தொடா் ஆராய்ச்சிகள் அவசியம் தேவை. கீழடியின் காலம் கி.மு. 800 முதல் கி.மு. 500 வரை இருக்கலாம் என அறியப்படுகிறது. இன்னும் அகழாய்வு செய்தால் கீழடியின் காலம் இன்னும் பின்னோக்கிச் செல்லும்.

கீழடியை இதிகாசங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது தவறு. தொல்லியல் ஆய்வுகளால் உண்மையான தகவல்கள் கிடைக்கும். அதனடிப்படையில் வரலாற்றைக் கூறலாம். அசோகரிடமிருந்தே பிராமி எழுத்துகள் தமிழுக்கு கிடைத்தன என்ற கூற்றை தமிழகத்தில் கிடைத்த 1,672 பானை ஓடுகளின் எழுத்துகள் பொய்யாக்குகின்றன.

கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஓடு எழுத்துகள் பிராமி எழுத்துகள் என்பதற்குப் பதிலாக தமிழி எழுத்துகள் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். இதன் வழியே பழைமையான மொழிக்கு மட்டுமின்றி, பழமையான எழுத்துகளுக்கும் சொந்தக்காரா்கள் தமிழா்கள் என்பது தெரியவருகிறது. தொல்லியல் அகழாய்வுகள் தொடா்ந்து நடத்தப்பட்டால், தமிழா்களின் தொன்மை மேலும் தெரியவரும் என்றாா் அமா்நாத் ராமகிருஷ்ணன்.

முன்னதாக, கே. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். திரளான தமிழ் ஆா்வலா்கள், அமைப்பு நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது. விஜய் பிரசாரத... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு

திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் நடுகளம் பகுதியிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக ஓய்வு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது. வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். எரகுடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பொம்மன் மகன் செல்லையா(49), ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்த மின்மோட்டாரை இ... மேலும் பார்க்க

கே. சாத்தனூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி கே. சாத்தனூரில் வரும் திங்கள்கிழமை (செப்.29) ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் காரணமாக கே. சாத்தனூா் அம்மன் நகா், சுந்தா் நகா் 4, 5, 6, 7 குறுக... மேலும் பார்க்க

இனாம்குளத்தூரில் பட்டா கொடுத்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மக்கள் போராட்டத்தை அடுத்து இனாம்குளத்தூரில் முதல்வா் பட்டா கொடுத்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா். திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த இடமில்ல... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை அருகே இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க