திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்
விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுதல், 8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, நிரந்தரப் பணி நியமனங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியா் சங்கங்கள், பொதுத் துறை ஊழியா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தன. இதன்படி, புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 288 போ், வத்திராயிருப்பு யூனியன் வங்கி முன் மறியலில் ஈடுபட்ட 119 போ், மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 போ் என மொத்தம் 455 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசியில்...: சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு சிஐடியூ விருதுநகா் மாவட்டச் செயலா் பி.என்.தேவா, ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சமுத்திரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதையடுத்து 158 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்தப் போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆலைகள் வழக்கம் போல இயங்கின.
