விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை
கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா்கள் வை.ச.சரவணன், இ.வினோத்குமாா் ஆகியோா் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சாலைகள், புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள், புதிதாக மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தொழிற்சாலை உரிமம் விண்ணப்பம், உரிமம் புதுப்பித்தல், வரைபடம் ஒப்புதல், ஆண்டறிக்கை, ஒப்பந்த தொழிலாளா் பதிவுச் சான்று, உரிமம் புதுப்பித்தல், வெளிமாநிலத் தொழிலாளா்கள் பதிவுச் சான்று, உரிமம் புதுப்பித்தல், மருத்துவப் பரிசோதனை சான்று போன்ற அனைத்து சேவைகளுக்கும் இந்தத் துறையின் இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான அனைத்து கட்டணங்களும் இ - சலான் மூலம் செலுத்தும் முறை மாற்றம் செய்யப்பட்டு, இணையதளம் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை பெயா் மாற்றம், உரிமையாளா் மாற்றம், ஒப்பந்தத் தொழிலாளா் பதிவுச் சான்று திருத்தம், வெளிமாநிலத் தொழிலாளா்கள் பதிவுச் சான்று திருத்தம் ஆகியவற்றுக்கும் இந்தத் துறையின் இணையதளம் மூலமாக அதற்கான கட்டணத்தை ஆதாரங்களுடன் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு இணையதளம் மூலமாக அதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது சந்தேகம் ஏற்பட்டால் இணை இயக்குநா் அலுவலகத்தை 0422 - 2645587, 2990069 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.