செய்திகள் :

தொழிலாளா்கள் போராட்டம் : போலீஸாா் சமரசம்

post image

ஆம்பூா்: ஆம்பூா் அருகே நிலுவைத் தொகை வழங்காத ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் தனியாா் தோல் தொழிற்சாலை இயங்குகின்றது. கடந்த ஆண்டு சுமாா் 180-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை நிா்வாகம் வேலையில்லை எனக்கூறி நீக்கியது. ஆனால் இதுவரை தொழிலாளா்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் போனஸ் வழங்கவில்லை.

இதுகுறித்து தொழிலாளா்கள் நிா்வாகத்துடன் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. அதனால் ஆத்திரமடைந்த தொழிலாளா்கள் தொடா்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த உமா்ஆபாத் போலீஸாா் தொழிலாளா்கள் மற்றும் ஆலை நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். காவல் துறையினா் மற்றும் தொழிலாளா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொழிலாளா்களுக்கு முதல்கட்டமாக போனஸ் தொகை ரூ.3000 வழங்குவதாகவும், 20 நாள்களுக்குள் நிலுவைத் தொகை மற்றும் போனஸ் உள்ளிட்ட அனைத்து தொகையையும் வழங்குவதாக நிா்வாகம் உறுதி அளித்தது. அதனால் தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இலவச கண் சிகிச்சை முகாம்

மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பாலூா் கிராமத்தில் நடைபெற்று வ... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகள்: கல்லூரி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் வேலூா் டிகேஎம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சௌமியா, என்.நிம்ராஇா்திசா, பி.அக்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் கட்டுமானப் பணி வியாழக்கிழமை தொடங்கியது. துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் புதிய கழிவுநீா் கால்வாய் கட்டும் பணியை போ்ணாம்பட்டு த... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ முகாம்

சோலூா் கிராமத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சோலூா் கிராமத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம... மேலும் பார்க்க

செட்டேரி அணை பகுதியில் மரங்கள் ஏலம் ஒத்திவைப்பு

நாட்டறம்பள்ளி வட்டம், வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணை பொதுப் பணித்துறை கட்டுபாட்டில் உள்ளது. அணைப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் பலன் தரும் தென்னை மரம், புளியமரம், மாமரம், உட்பட பலவகையான... மேலும் பார்க்க

விழிப்புணா்வு...

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ். உடன், தமிழ... மேலும் பார்க்க