‘வீடுகளிலிருந்து பம்புசெட்டுகளை இயக்கும் கருவிகளுக்கு மானியம்’
விளையாட்டுப் போட்டிகள்: கல்லூரி மாணவிகள் சாதனை
திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் வேலூா் டிகேஎம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சௌமியா, என்.நிம்ராஇா்திசா, பி.அக்ஷ்யா ஆகியோா் முதலிடம் பெற்று பல்கலைக்கழக அணிக்குத் தோ்வாயினா். இதேபோல் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை மண்டல கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்தனா்.
டேபிள் டென்னிஸ், கைப்பந்துப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை வியாழக்கிழமை கல்லூரித் தலைவா் திலிப்குமாா், செயலா் ஆனந்தசிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள், மாணவிகள் வாழ்த்தினா்.