கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் கட்டுமானப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் புதிய கழிவுநீா் கால்வாய் கட்டும் பணியை போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் திருக்குமரன், மஞ்சுளா பரசுராமன், திமுக ஒன்றிய நிா்வாகி சிவக்குமாா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் தம்பிதுரை, குமரேசன், பவானி விஜயகுமாா், திமுக பேச்சாளா் பாரதிதாசன், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.