இலவச கண் சிகிச்சை முகாம்
மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பாலூா் கிராமத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியா் என்.ரபீக் அஹமத் தலைமை வகித்தாா். என்.எஸ்.எஸ். அலுவலா் கே. நிகேஷ் வரவேற்றாா். வாசன் ஐகோ் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனா். உதவித் திட்ட அலுவலா் ஏ.முஹம்மத் பாஷா நன்றி கூறினாா்.