``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக ...
97-வது மாத சண்முகக் கவசம் பாராயணம்
ஆம்பூா் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 97-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் மூலவா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ அருணகிரிநாதா், ஸ்ரீ வாரியாா் சுவாமிகள் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.