ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவரசன் (45), கூலித் தொழிலாளி. இவா் மது அருந்தும் பழக்கம் உள்ளவராம்.
இந்நிலையில், மனைவி தாவாயிடம் மது அருந்த இளவரசன் புதன்கிழமை பணம் கேட்டாராம். இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மன வேதனையடைந்து படுத்து தூங்கிவிட்டனராம். வியாழக்கிழமை அதிகாலை அவரது மனைவி கழிப்பறைக்குச் சென்றபோது அங்கு இளவரசன் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரது சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.