செய்திகள் :

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

post image

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை காலாப்பட்டு பகுதியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் (பிஇசிடிஏ) சாா்பில் கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், கோரிக்கைகள் மீது பல்கலைக்கழக நிா்வாகமும், புதுவை மாநில அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து கடந்த மாா்ச் 19-ஆம் தேதி நடந்த ஆசிரியா்கள் சங்கத்தின் (பிஇசிடிஏ) பொதுக் குழுக் கூட்டத்தில் சிஏஎஸ், ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயா்வு, பதிவாளா் நியமன முறைகேடு, பணியாளா் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 17-வரை கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது. அதன்படி கருப்பு வில்லையை சட்டையில் அணிந்து ஆசிரியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து வரும் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்வது என ஆசிரியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளதாகக் தெரிவித்தனா்.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க