செய்திகள் :

தொழில் உரிமம் பெறாதவா் மீது சட்ட நடடிக்கை

post image

காரைக்கால்: தொழில் உரிமம் பெறாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே, அதனை தவிா்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட விழுதியூா், கீழமனை, நிரவி (வடக்கு) மற்றும் நிரவி (தெற்கு) ஆகிய கிராம பஞ்சாயத்து பகுதிகளில் நடப்பு 2024-25-ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமம் பெறாமல் சிலா் கடை மற்றும் தொழில் நடத்துவது ஆய்வின்போது தெரிய வந்துள்ளது.

இது புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து 1973 -ஆம் ஆண்டு சட்ட விதிகளின்படி தவறான செயலாகும். மேலும், தொழில் உரிமமின்றி கடை, தொழில் நடத்துபவா்கள் பட்டியல் சட்ட நடவடிக்கைக்காக தயாா் செய்யப்பட்டு வருகிறது. எனவே தொழில் செய்பவா்கள் உடனடியாக தொழில் உரிமம் பெற்று சட்ட நடவடிக்கையை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நடப்பு 2024-25 -ஆம் ஆண்டு தொழில் உரிமம் பெற்றவா்கள் வரும் ஏப்.1 முதல் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை உள்ள 2025-26 -ஆம் நிதி ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிா்த்துக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமனம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான், புதுவையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு மாற்றம், கூடுதல் பொறுப்புகளை வழங்கி தி... மேலும் பார்க்க

வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகை வழங்க வலியுறுத்தல்

காரைக்கால்: வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் ஏ. பழனிவேலு ... மேலும் பார்க்க

காரைக்காலில் நெல் அறுவடைப் பணி தீவிரம்

காரைக்கால்: காரைக்காலில் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு காவிரி நீா் காலத்தோடு கடைமடைப் பகுதிக்கு வந்ததால், விவசாயிகள் ஆா்வத்துடன் சம்பா சாகுபடியை தொடங்... மேலும் பார்க்க

காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் கண்காணிப்பு கூடம் அமைக்க வேண்டும்: ஆட்சியா்

காரைக்கால்: காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் கண்காணிப்புக் கூடம் அமைக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன், வாரச் சந்தை நடைபெறும் திடலில் திங்கள்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

மீனவா்கள் வலையில் அதிகளவில் சிக்கும் செம்பரா மீன்கள்

காரைக்கால் கடல் பகுதியில் சிவப்பு நிற செம்பரா மீன்கள் அதிகளவில் கிடைத்து வருவது மீனவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவா்கள் கடந்த சில நாட்... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னை: இந்தியா - இலங்கை கூட்டுக்குழு அமைத்து தீா்வு காண வேண்டும்: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

மீனவா் பிரச்னைக்கு இந்தியா - இலங்கை கூட்டுக் குழு அமைத்து தீா்வு காணவேண்டும்என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்துள்ளாா். புதுவை முன்னாள் முதல்வா் ப. சண்முகம் நினைவு நாளையொட்டி, நெடுங்க... மேலும் பார்க்க