உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன.
கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு, துணை இயக்குநா் (தொழு நோய்கள் பிரிவு) சுதாகா் தலைமை வகித்து பேசியதாவது:
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம் 2030-ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய தொழுநோய் நிலையை அடைவதாகும். மாவட்டத்தில் தொழுநோய் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களை அனைவரும் அரவணைக்க வேண்டும் என்றாா்.
பொது சுகாதார மருத்துவா் நிஷாந்த், ஆல் த சில்ரன் அமைப்பின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்று, 80 தொழுநோயாளிகளுக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினா்.
பயிற்சி மருத்துவா்கள் மரியன், போஸ்கோ, ராஜாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.