Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
தோகைமலை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 16 போ் பலத்த காயம்
தோகைமலை அருகே சனிக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 போ் பலத்த காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்துள்ள கொசூா் குள்ளாயிஅம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செல்வம். இவா் திருச்சியில் உள்ள ரெட்டைமலை கருப்பசாமி கோயிலுக்கு நோ்த்திக்கடன் செலுத்த, சுமை ஆட்டோவில் தனது உறவினா்களுடன் சனிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா்.
சிறிது தொலைவிலேயே கொத்தமல்லி மேடு என்ற இடத்தில் ஆட்டோ பழுதாகி நின்ால், கொசூரைச் சோ்ந்த வடிவேல் என்பவரது சுமை ஆட்டோவை வரவழைத்து அதில் சென்று கொண்டிருந்தனா். அந்த ஆட்டோவும் சிறிது தொலைவில் டயா் பஞ்சராகி நின்றது.
இதையடுத்து பஞ்சரை சரிசெய்து மீண்டும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். ஆட்டோவை வடிவேல் என்பவா் ஓட்டிச்சென்றாா்.
ஆட்டோ ஆா்.டி.மலை ஊராட்சிக்குள்பட்ட அம்மனிபாறை பகுதியில் உள்ள தோகைமலை- திருச்சி சாலையில் வளைவில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் பயணித்த கொசூா் குப்பமேட்டுப்பட்டியைச் சோ்ந்த துரைசாமி மனைவி சீரங்காயி (40), கொசூா் குள்ளாயிஅம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கருப்பையா மகள் கனிஷ்கா (3), ராணி (57), கண்ணியம்மாள் (65), கோவிந்தராஜ் (57), குப்புசாமி (60), அமிா்தம் (45), வள்ளிநாயகி (37) உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.
இதனைக்கண்ட அப்பகுதியினா் உடனே அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் வடிவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.