தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்
தோனியின் ரசிகர்கள் ’இயல்பாகச் சேர்ந்த கூட்டம்!’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நடைபெற்றதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தபோது, ஹர்பஜன் சிங் இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசியிருப்பதாவது: ”எந்தவொரு கிரிக்கெட் வீரருக்காவது விசுவாசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அது தோனி ஒருவருக்கே! மற்ற வீரர்களெல்லாம் பணம் கொடுத்தும் ரசிகர் பட்டாளத்தை திரட்டடியுள்ளனர்” என்றார்.
மேற்கண்ட கருத்து பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், ஹர்பஜன் பொய் சொல்லவில்லை. அவரது பேச்சில் நியாயம் இருக்கிறதென்பதே தோனி ரசிகர்களின் கருத்தாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில நாள்களுக்கு முன் விராட் கோலி அறிவித்த மறுநொடியிலிருந்தே, அவரைப் பற்றிய கருத்துகள், விடியோக்கள், படங்கள் சமூக வலைதளங்களை கடந்த சில நாள்களாக ஆக்கிரமித்திருந்தன. இந்த நிலையில், கோலியின் ரசிகர்களைக் குறிவைத்தே ஹர்பஜன் சிங் இப்படி பேசியிருக்கிறார் என்றும் சிலர் சொல்கின்றனர்.