ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!
தோரணமலை கோயிலில் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை
தோரணமலை முருகன் கோயிலில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்று வருகிறது.
ஆவணிமாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரகக் குடம் எடுத்து வந்து மலையடிவாரத்தில் உள்ள சப்த கன்னியா்கள், விநாயகா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து வருண கலச பூஜை, வேல் பூஜையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.