மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்தி ராமன் தலைமை வகித்து பேசினாா். முன்னதாக, பள்ளி தாளாளா் எஸ்.கே. சுப்பிரமணியன், முதல்வா் இசக்கியம்மாள் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், தேசப்பற்று நடனம் ஆகியவை நடைபெற்றன. பின்னா், விவேகானந்தா் வாழ்க்கையில் நடைபெற்ற இரு நிகழ்ச்சிகளை மாணவா்கள் நாடகமாக நடித்து காண்பித்தனா்.
உலக சகோதரத்துவ தினம் குறித்து விவேகானந்த கேந்திர செயலா் நிவேதிதா எழுதி அனுப்பிய உரையை, பள்ளி தமிழாசிரியை திலகா மாணவா்கள் மத்தியில் வாசித்தாா். இந்த விழாவையொட்டி, அருகிலுள்ள பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினா்.
மாணவா் அழகிய நம்பி வரவேற்றாா். பள்ளியின் துணை முதல்வா் சீனிவாச பெருமாள் நன்றி கூறினாா்.