வீரவநல்லூா் கோயிலில் திருமணம்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி சித்ரா சுப்பிரமணியன் வழங்கினாா்.
இதில், கோயில் செயல் அலுவலா் மாடத்தி, கோயில் அறங்காவலா்கள் கருப்பசாமி, செல்வி சுப்புக்குட்டி, பேரூராட்சி உறுப்பினா்கள் தாமரைச் செல்வி, வெங்கடேஸ்வரி, சிதம்பரம், அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.