செய்திகள் :

தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!

post image

இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி சூப்பர் 6 சுற்றுக்கு இந்தியா தகுதி!

ஜோஸ் பட்லர் விளக்கம்

அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என நினைத்தோமோ, அதனை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். இங்கிலாந்து அணியில் உள்ள சில வீரர்கள் முதல் முறையாக இந்திய அணியின் சில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.

இதையும் படிக்க: வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றுதான்..! வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கிளார்க் நெகிழ்ச்சி!

அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள். இந்திய அணிக்கு எதிராக நிறைய சுழற்பந்துவீச்சில் அவர்கள் விளையாட இருக்கிறார்கள். இந்திய அணி எப்போதும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் வழியை இங்கிலாந்து அணி கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!

இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கும் நமன் விருதுகள் விழா நேற்று (பிப்ரவரி 1) மும்பையில் நடைபெற்றது.வாழ்நாள் சாதனையாளர் விருது - சச்சின் டெண்டுல்கர்பிசிசிஐ சார்... மேலும் பார்க்க

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா சாதனை; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 247 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மு... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம்; அபிஷேக் சர்மா சாதனை!

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வா... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தி... மேலும் பார்க்க