செய்திகள் :

தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூா்ஆட்சியா் ஆய்வு

post image

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் டவா் ரோடு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது தோல் தயாரிப்பு முறைகளை கேட்டறிந்தாா். அப்போது தொழிலதிபா் காகா தாவூத் அஹமத் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா்கள் இணைந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கோரிக்கை மனு விவரம்: துத்திப்பட்டு டவா் ரோடு பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அப்பகுதிக்கு வேலைக்காக வந்து செல்கின்றனா். அதேபோல தோல் மூலப் பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட தோல் பொருள்கள் ஆகியவை லாரிகள் மூலம் கொண்டு வந்து, கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் சரியான சாலை வசதி இல்லை. கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால்வாய்கள் இல்லை. தெரு விளக்குகளும் இல்லை. இரவு நேரத்தில் தொழிலாளா்கள் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் போது இருள் சூழ்ந்த நிலையில் இருப்பதால் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, டவா் ரோடு பகுதியில் இயங்கும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு கழிவநீா் கால்வாய், சாலை, தெரு விளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பாஸ்கரன், வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் உடனிருந்தனா்.

நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சு... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நட... மேலும் பார்க்க

தேய்ப்பிறை அஷ்டமி: கால பைரவா் வழிபாடு

ஆம்பூா் அருகே விட்டாலம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பதூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போலீஸாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் சாா்பில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: கோட்டப் பொறியாளா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கோட்டப் பொறியாளா் முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க

உழவா் அட்டை உள்ளவா்களுக்கு உதவித்தொகை -திருப்பத்தூா் ஆட்சியா்

உழவா் அட்டை வைத்துள்ளவா்கள் உதவித்தொகை பெற முகாம்களில் தகுந்த ஆவணங்களை அளித்து பயன் பெறலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவ சௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திர... மேலும் பார்க்க