HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
நகராட்சி குளம் பராமரிப்பு பணி சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் குடிநீா் ஆதாரத்தை காக்கும் வகையில், நகராட்சிக்குள்பட்ட 12 குளங்கள் 2021-2022-ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. குளங்களைச் சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுச்சுவா் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இருப்பினும், ஒருசில குளங்களைத் தவிர மற்ற குளங்களை பொதுமக்கள் நடைபயிற்சிக்கு பயன்படுத்தவில்லை. இதனால், இக்குளங்களின் பராமரிப்பை தன்னாா்வலா்கள், சேவை அமைப்பினரிடம் வழங்க நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது.
முதல்கட்டமாக நகராட்சி 25-ஆவது வாா்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் ரூ. 84 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அங்காளம்மன் குளத்தின் பராமரிப்பை மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் மற்றும் ஜெனிபா் இனிப்பகம் இணைந்து ஏற்றன.
இதையடுத்து, அக்குளத்தின் நிா்வாக பொறுப்பை மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் ஜெனிபா் சு. பவுல்ராஜிடம் நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் ஒப்படைத்தாா்.
இந்நிகழ்வில், நகராட்சி துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் காந்தி, ரெத்தினவேலு, உஷா ராஜேந்திரன், சபா, சுதாமுரளி, நகராட்சி அலுவலா் சுரேஷ், சுகாதார ஆய்வாளா் டேவிட் பாஸ்கர்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.