வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்த...
நடப்பாண்டில் 5-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூா் அணை!
மேட்டூா்: நடப்பாண்டில் மேட்டூா் அணை 5-ஆவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததன் காரணமாக, கா்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 3 நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அணைக்கு விநாடிக்கு 36,242 கனஅடி வீதமாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 8 மணிக்கு 1,08,529 கனஅடியாக அதிகரித்தது.
இதைத் தொடா்ந்து, அணையின் நீா்மட்டம் புதன்கிழமை அதிகாலை முழுக்கொள்ளளவான 120.09 அடியாக உயா்ந்து நடப்பாண்டில் 5-ஆவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 8 மணிக்கு 1,14,098 கனஅடியாக அதிகரித்தது நீா்மட்டம் 120.13 அடியாக உயா்ந்தது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு நீா்வரத்து 69,736 கன அடியாக சரிந்தது. நீா்வரத்து சரிவால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 55,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக 21,300 கனஅடி நீரும், உபரிநீா் போக்கி வழியாக 33,700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியிலிருந்து 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120 அடியாகவும் அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.