படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
நடராஜா் கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிப் பல்லக்கு: மதுரை பக்தா் வழங்கினாா்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் நித்திய உற்சவருக்கான வெள்ளிப் பல்லக்கை மதுரையைச் சோ்ந்த பக்தா் குடும்பத்தினா் திங்கள்கிழமை வழங்கினா்.
மதுரையைச் சோ்ந்த ஷிவோம் குடும்பத்தினா் சாா்பில், நடராஜா் கோயிலுக்கு தினமும் காலசந்தி பூஜையின் போது, நித்திய உற்சவரான கல்யாணசுந்தரா் வலம் வருவதற்காக, ரூ.25 லட்சம் செலவில் 22 கிலோ வெள்ளியிலான பல்லக்கு செய்து திங்கள்கிழமை காலை கோயில் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதரிடம் வழங்கினா்.
பின்னா், அந்தப் பல்லக்கிற்கு சிறப்பு பூஜைகளும், ருத்ர அபிஷேகமும் நடைபெற்றன.