செய்திகள் :

நடிகர் சங்க கட்டட திறப்பு விழா தேதியை அறிவித்த விஷால்!

post image

நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார்.

நடிகர் சங்கங்கத்திற்கான கட்டடம் கட்டும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், துவங்கிய சில மாதங்களிலேயே வங்கிக் கடன் பெறுவது தொடர்பான உள்பட சில சிக்கல்கள் எழுந்ததால் கட்டட உருவாக்கத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன.

சில மாதங்களுக்கு முன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய கட்டடத்தில் நடிகர்கள் சங்க அலுவலகங்கள், திரையரங்கம், நடிப்பு பயிற்சி அரங்கங்கள், உடற்பயிற்சி கூடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஷால், “தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட திறப்பு விழா ஆகஸ்ட்15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் நடிகர் சங்க கட்டடம் திறப்புவிழா நடைபெறும். நடிகர் சங்க புதிய கட்டட பணிகள் ஜூலையில் நிறைவடையும். நீங்கள் (துணை நடிகர்கள்) அனைவரும் வர வேண்டும். வாழ்த்த வேண்டும்.

அதன்பிறகுதான் எனது திருமண விழா. அது உங்களுடைய கட்டடம். நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சினிமா துறைக்காக கட்டப்பட்ட கட்டடம். அம்மாக்கள், பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வர வேண்டும். வாசலில் நான் நிற்பேன்” என்றார்.

இதையும் படிக்க: கேன்ஸ் பட விழா நடுவராக பாயல் கபாடியா!

சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல்: சாதனை படைத்த ரெட்ரோ!

ரெட்ரோ திரைப்படம் சூர்யாவின் படங்களிலேயே முதல்நாளில் அதிகமான வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தேதி திரையரங்குக... மேலும் பார்க்க

மஞ்சு வாரியரிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்? வைரலாகும் விடியோ!

கடைதிறப்பு விழாவுக்குச் சென்ற நடிகை மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் தவறாக நடந்துகொண்டதாக இணையத்தில் விடியோ வைரலாகி வருகிறது.மலையாளத்தில் முன்னடி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூல... மேலும் பார்க்க

சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது

கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.இந்திய கால்பந்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது... மேலும் பார்க்க

கௌஃபுடன் மோதும் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினாா். அதில் அவா், அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளாா். மகளிா்... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் புதிய படத்தில் இணையும் பிரபல இயக்குநர்!

துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் இணைந்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் துல்கர்... மேலும் பார்க்க