CSK: சண்டை செய்த ஆயுஷ் மாத்ரே; கோட்டைவிட்ட சென்னையின் பினிஷர்கள்!' - சிஎஸ்கே எப்...
மஞ்சு வாரியரிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்? வைரலாகும் விடியோ!
கடைதிறப்பு விழாவுக்குச் சென்ற நடிகை மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் தவறாக நடந்துகொண்டதாக இணையத்தில் விடியோ வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் முன்னடி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் பிரபலமானார்.
பின்னர் அஜித், ரஜினி படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் விடுதலை 2 படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (மே.2) கடை திறப்பு விழாவுக்குச் சென்ற மஞ்சு வாரியரைப் பார்க்க கூட்டம் கூடியது.
கூட்டத்தினைக் கண்ட மஞ்சு வாரியர் காரில் ஏறி நின்று கை அசைத்துக்கொண்டிருப்பார்.
இந்தக் கூட்டத்திற்கு நடுவில் யாரோ ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்புப் பகுதியில் கை வைப்பதாக விடியோவில் பதிவாகியுள்ளது.
இது ஆணா, பெண்ணா என எதுவும் தெரியவில்லை. ஏனெனில் அங்கு பெண்களும் அதிகமாக குவிந்திருந்தார்கள். கையில் கைக்குட்டையுடன் இருப்பதால் அது பெண்ணாக இருக்குமெனவும் பலர் கூறி வருகிறார்கள்.
மஞ்சு வாரியர் இதைக் கண்டுகொள்ளாமல் ரசிகர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்துக்கொடுத்துவிட்டு காரில் சென்றுவிடுவார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் அந்த முகம் தெரியாத ஒருவரின் அநாகரீகமான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகைகள், நடிகர்களுக்கு பொதுவெளியில் பாதுகாப்பு இல்லை என்பதும் தனியுரிமை கேள்விக்குள்ளாவதும் பலகாலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
Awful behaviour from the crowd having no sense of boundary or respect towards the actress !#ManjuWarrierpic.twitter.com/6YYEpCDUQu
— Mollywood BoxOffice (@MollywoodBo1) May 2, 2025