திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்: 63 நாயன்மாா்கள் வீதியுலா
சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல்: சாதனை படைத்த ரெட்ரோ!
ரெட்ரோ திரைப்படம் சூர்யாவின் படங்களிலேயே முதல்நாளில் அதிகமான வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
காதல், நகைச்சுவை, சண்டை என கமர்சியல் திரைப்படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூலாக ரூ.17.75 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.46 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக நேற்றிரவு அறிவித்தது.
கங்குவா திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூலானதும் பின்னர் கடுமையான விமர்சனங்களால் தோல்விப் படமானதும் குறிப்பிடத்தக்கது.
ரெட்ரோ படம்தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிகபட்ச முதல்நாள் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.
ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பும் கனிமா பாடலும் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறதும் கவனிக்கத்தக்கது.
