Ravi Mohan: "என்னை மென்மையான அன்பாலும் கருணையாலும் ஆசீர்வதித்த மூன்று பெண்கள்!" ...
நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு; இரவு பாரில் நடந்த மோதல், நடு ரோட்டில் சண்டை; என்னதான் நடந்தது?
கோலிவுட்டில் பரபரவென தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனன், இப்போது மலையாளம், தமிழ் இரண்டிலும் பெரிதாக நடிப்பதில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 24) கேரளாவின் கொச்சி பேனர்ஜி சாலையில் இருக்கும் இரவு நேர சொகுசு பார் ஒன்றில் நண்பர்களுடன் சென்றிருக்கிறார் லட்சுமி மேனன். அங்கு லட்சுமி மேனன் குரூப்பிற்கும், மற்றொரு இளைஞர்கள் குரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரவு 11 - 12 மணி வரை நடந்த இந்தச் சண்டைக்குப் பிறகு லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஸ் இருவரும், லட்சுமி மேனனிடம் சண்டை போட்ட ஐடி இளைஞரை காரில் தூக்கிப்போட்டு, காருக்குள் வைத்து அவரை அடித்து, போகும் வழியில் நடு ரோட்டில் சண்டை போட்டுத் தள்ளிவிட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் புகாரளித்திருக்கிறார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஐடி-யில் வேலைப்பார்க்கும் இளைஞரைத் தாக்கியதாக லட்சுமி மேனன், மிதுன், அனீஸ் உள்ளிட்டோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் மிதுன், அனீஸ் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் லட்சுமி தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் நடிகை லட்சுமி மேனனைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாள்கள் திரையுலகில் காணாமல் இருந்த லட்சுமி மேனன், இப்போது சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக இருப்பது மலையாள திரையுலகில் பேசுபொருளாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...