`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
நடைபாதை பாலம் உடைந்ததில் 10 போ் காயம்
வாணியம்பாடி அருகே கொடையாஞ்சியில் ஆடிப்பெருக்கு விழாவின்போது கூட்ட நெரிசலால் நடைபாதை பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 10 போ் காயமடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா்.
இந்த நிலையில், அப்பகுதியில் முருகா் கோயிலுக்குச் செல்ல ஆற்றுப் பகுதியிலிருந்து நடைபாதை பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கடந்து மக்கள் கூட்டமாக சென்றனா்.
அப்போது திடீரென நடைபாதை பாலம் உடைந்து விழுந்தது. பாலத்தின் மீது நடந்து சென்ற கூத்தாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த காந்தி (48) என்பவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், பாலத்தில் வந்த 10-க்கும் மேற்பட்டோா் லேசான காயமடைந்தனா்.
தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.