ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
நடைப்பயிற்சி சென்றவா் மீது தாக்குதல்
திருவாரூா் அருகே நடைப்பயிற்சி சென்றவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், சேமங்கலம், சித்தாநல்லூா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவா், தாலுகா காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாா் மனு:
பிராமண சமுதாயத்தை சோ்ந்த நான், வயது மூப்பு காரணமாக அமைதியான முறையில் காலத்தை கழித்து வருகிறேன். தினசரி காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். அந்த வகையில், வழக்கம்போல் சனிக்கிழமை மாலை, எனது பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொண்டேன்.
அப்போது, அப்பகுதியில் சிலா் மது அருந்திக் கொண்டிருந்தனா். அவா்களில் இருவா் என்னைப் பிடித்து இழுத்து, அடித்ததுடன், ஒருவா் எனது பூணூலையும் அவிழ்த்து விட்டாா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.