நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!
இந்தியாவின் நட்சத்திர வீரராக நிதீஷ் ரெட்டி இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து நிதீஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 385/6 ரன்கள் எடுத்தது.
21 வயதாகும் ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி தனது முதல் சத்தினை பதிவு செய்துள்ளார். இதில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும்.
இந்தத் தொடரில் நிதீஷ் ரெட்டி 41, 38*, 42, 42, 16 என சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 50-க்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் ஆஸி. மண்ணில் சதமடித்த பட்டியலில் 3ஆம் இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
நட்சத்திர வீரர்
இதுதான் முதல் சதம். வருங்காலத்தில் அதிகமான ரன்களை குவிப்பார். அதிகளவு ரன்களை குவிப்பாரென நான் நம்புகிறேன். அவர் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்.
எப்படியானாலும், அவரது தந்தையும் குடும்பத்தாரும் செய்த தியாகத்தை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நிதீஷ் இந்த இடத்துக்கு வரக்காரணம் இந்திய கிரிக்கெட் அணி. அதனால் இதை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நிதீஷ் தனக்கு உண்மையாக இருந்தால், அவருக்கு நிச்சயமாக வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கை காத்திருக்கிறது என்றார்.
ஷுப்மன் கில் நீக்கப்பட்டு நிதீஷ் அணியில் தக்கவைத்ததுக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள்.
ரவி சாஸ்திரி கூறியதாவது:
பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க வேண்டும்
நிதீஷ் விளையாடிய விதத்தினைப் பார்க்கும்போது இன்றுதான் அவர் 7ஆவது இடத்தில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்க வேண்டுமென தோன்றியது. அணியில் சமநிலை வேண்டுமானால் அவர் 5 அல்லது 6ஆவது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும். 5 பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகள் எடுக்கும்படி அமைக்க தேர்வுக்குழுவுக்கு ஓர் நம்பிக்கை அளித்துள்ளார்.
டாப் 6க்குள் பேட்டிங் ஆட நிதீஷ் திறமை வாய்ந்தவர். அப்படி அமைந்தால் ஆட்டத்தின் போக்கினையே மாற்றிவிடுவார். சிட்னியில் அவரை பேட்டராக டாப் 6க்குள் எடுத்து 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் எனக் கூறினார்.
பல நேரங்களில் டெயில் எண்டர் (கடைசியில் விளையாடும் வீரர்கள்) பேட்டர்களுடன் நிதீஷ் விளையாடுகிறார். முன்னதாக களமிறங்கினால் அதிகமான ரன்களை குவிக்க முடியும் என வர்ணனையாளர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.