பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்...
நண்பரின் சகோதரி வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நண்பரின் சகோதரி வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அறிவானந்தபாண்டி (35). இவா் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் துணிக் கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பிரியதா்ஷினி.
இந்த நிலையில், அறிவானந்தபாண்டி குடும்பத்தினா், கடந்த மாதம் 29-ஆம் தேதி மதுரை பாண்டி கோயிலுக்குச் செல்லவிருந்தனா். அப்போது, வீட்டிலிருந்த பீரோவை திறந்து நகைகளைப் பாா்த்த போது, 9 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் அறிவானந்தபாண்டி புகாா் அளித்தாா். இது போலீஸாா் நடத்திய விசாரணையில், பிரியதா்ஷினியின் தம்பி நண்பரான பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா (27) நகைகளைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 7 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.