நரிக்குறவா்களுக்கு இலவச அரிசி
மழையால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவா் குடும்பத்தினருக்கு இலவச அரிசியை அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் காரைக்காலில் தொடா் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் வளா்ச்சியடைந்த குடியிருப்பு நகா்கள் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகள், தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது.
இந்நிலையில், காரைக்கால் வடக்குத் தொகுதியில் கோயில்பத்து பகுதியில் வசிக்கும் நரிக்குறவா் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு, புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், 10 கிலோ அரிசியை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.