செய்திகள் :

நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

24.08.2025 அன்று மாலை அவர் உணவருந்தும்போது உணவுக்குழாயில் புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இரவு 10.30 மணிக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்ட நேரத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நல்லகண்ணு
நல்லகண்ணு

இந்நிலையில் நல்லகண்ணுவை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்து அவர்களின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து மருத்துவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர் முத்தரசன் உள்ளிட்ட தோழர்களிடமும் நேரில் கேட்டறிந்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், "நல்லகண்ணுவைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் வணக்கம் சொன்னபோது, அவரும் அதைப் புரிந்துகொண்டு பதிலுக்கு வணக்கம் சொன்னார். நேற்று இருந்ததைவிடவும் இன்று நல்லகண்ணு அவர்களின் உடல்நலம் நன்றாக முன்னேறியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உடல்நலம் பெற்று மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தென்காசி: "ரேசன் கார்டில் வனவிலங்குகளைச் சேருங்க" -வனத்துறைக்கு எதிராக விவசாயிகள் மனு; பின்னணி என்ன?

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 29) மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகள... மேலும் பார்க்க

`எப்படி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு?' - அமைச்சர் மா.சு விளக்கம்

கடந்த 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்... மேலும் பார்க்க

`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்திலேயே கிடையாது. இந்தமாதிரி ஊரு எங்கயாச்சும் உண்டா? ஏங்க... தனி ஐலாண்டுங்க. அங்கப் பாருங்க, காஷ்மீர் மாதிரி இ... மேலும் பார்க்க

``குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்'' - RSS தலைவர் மோகன் பகவத் பேசியது என்ன?

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த... மேலும் பார்க்க

எண்ணெய் கொள்முதல்: ``இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்'' - USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.சமீபத்தில், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்த... மேலும் பார்க்க

"இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றிதான், அடுத்தடுத்த வெற்றிக்கான அடித்தளம்" - மு.க. ஸ்டாலின்

பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங... மேலும் பார்க்க