செய்திகள் :

நாகர்கோயில்: துணியைச் சரியாக தைக்காத டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக் கொலை!

post image

நாகர்கோயிலில் டெய்லருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரைக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகே செல்வம் என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமையில் அவரது கடையில் கத்தரிக்கோலால் குத்தி, கொலை செய்யப்பட்ட நிலையில், செல்வத்தின் உடல் மீட்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கொலை செய்தவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், செல்வத்தின் கடைக்கு ஒருவர் வந்து செல்வது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்தான் செல்வத்தை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்பதும், செல்வத்திடம் அவர் பேன்ட் தைக்கக் கொடுத்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில்தான், பேன்ட்டை சரியாகத் தைக்காததாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வத்தின் தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் சந்திரமணி கத்தரிக்கோலால் குத்திவிட்டு, தப்பியோடியது தெரிய வந்தது.

செல்வம் கொலையுண்ட சில மணிநேரங்களிலேயே குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் (84) காலமானார்.இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர்... மேலும் பார்க்க

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றத... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் லாக்-அப் மரணங்கள்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் காவல்துறை அத்துமீறி செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் சமீபகாலமாக லாக்-அப் மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம்: 3 மாதங்களில் ரூ. 1 கோடிக்கு அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்த உடைமைகளில் இரு... மேலும் பார்க்க

நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய்

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக வி... மேலும் பார்க்க