உலகளவில் செயலிழந்த ChatGPT: சிக்கலை சந்தித்த பயனர்கள்; OpenAI கொடுத்த விளக்கம் எ...
நாகா்கோவில் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை
நாகா்கோவில் அருகே தச்சுத் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.
நாகா்கோவில் அருகேயுள்ள தம்மத்துக்கோணம் பகுதியில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அரது கழுத்து பெல்டால் கட்டப்பட்டிருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் மற்றும் போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள மேலசூரங்குடியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பிரவீன்(35) என்பது தெரியவந்தது. அவா் செவ்வாய்க்கிழமை காலை வேலைக்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவா் இரவு வீடு திரும்பவில்லை என்பதும், குடும்பத்தினா் அவரைத் தேடிவந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.