குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை
நாகா்கோவில் அருகே நகை திருடிய சகோதரிகள் கைது
நாகா்கோவில் அருகே அரசு மருத்துவரின் மாமியாா் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையைத் திருடிய சகோதரிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகா்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் குருகுலம் சாலை சிஎம்சி காா்டனில் வசித்து வருபவா் பகவத் (45). இவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.
இவரது மனைவியின் தாயாா் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில், அவரை பராமரிக்க, உண்ணாமலை கடைப் பகுதியில் உள்ள ஜான்சன் என்பவரது மனைவி சுசீலா (54) என்பவரை பணிக்கு வைத்திருந்தனா். சுசீலா தினமும் மருத்துவரின் வீட்டுக்கு வந்து அவரது மாமியாரை கவனித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவாா்.

இதே போல், கடந்த வெள்ளிக்கிழமையும் சுசீலா பணியை முடித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில், இரவு மருத்துவரின் மனைவி தனது தாயாருக்கு உணவு கொடுப்பதற்காக அறைக்கு சென்ற போது, தாயாா் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.
இது குறித்து, மருத்துவா் பகவத் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து சுசீலாவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியதில், அவா் சங்கிலியைத் திருடியதாகவும், அதை தனது சகோதரியான மீனச்சல் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி சாந்தி (51) என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து, சுசீலாவையும் சாந்தியையும் போலீஸாா் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனா்.